திருமண பொருத்தமும் வயது வித்தியாசமும்

people art festival travel

வரன் வதுவுக்கு இடையே வயது வித்தியாசம் இருக்க வேண்டுமா ?? வேண்டுமெனில் இவர்களில் யார் பெரியவராக இருக்க வேண்டும் ?? இக்கேள்விகளுக்கு உண்டான விளக்கத்தை வாழ்வியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் அறிந்துகொள்வோம் .

திருமண பொருத்தம் பார்க்க நிறைய விதிகளும் விதி விலக்குகளும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது , பெயர் பொருத்தம் நக்க்ஷத்திர பொருத்தம் ராசி பொருத்தம் தாச புக்தி பொருத்தம் தோஷ பொருத்தம்( பாவ சாம்யம் / தோஷ சாம்யம் ) லக்ன பொருத்தம் க்ரஹ பொருத்தம் பாவ பொருத்தம் … இவ்வளவு விதமான பொருத்தங்களை பார்க்க வேண்டி உள்ளது. இவை ஒவ்வொன்றையும் விளக்கமாக ஒவ்வொரு பதிவாக இடுகிறேன் . இப்போது வரன்களிடையே வயது வித்தியாசம் பற்றிய விளக்கத்தை பார்போம் .

முதற்கண் வரன்களிடையே வயது வித்தியாசம் அவசியமா ?? ஆம் . அவசியம்.

இதற்கான காரணத்தை முதலில் ஜோதிட ரீதியாக பார்ப்போம் . நவக்ரஹங்களில் தினக்கோள் மாதக்கோள் ஆண்டுக்கோள் என்பதாக க்ரஹ சஞ்சாரம் அமைந்திருக்கிறது இவற்றுள் ஆண்டு கோள்களான குரு புத்ரகாரகன் சனி ஆயுட்காரகன் ராகு கேதுக்கள் மிக கடுமையான தோஷங்களை ஏற்படுத்தக் கூடியவர்கள்

எனவே கணவன் மனைவி இருவரில் ஒருவருடைய ஜாதகத்தில் இவ்வாண்டுக்கோள்கள் பகை வீட்டிலோ பகை க்ரஹத்தோடு இணைந்தோ பலம் இழந்தோ இருந்தால் மற்றொருவருடைய ஜாதகத்திலேனும் சாதகமாய் இருக்க வேண்டியது அவசியம் .

அதாவது வரன் வது ஜாதகத்தில் குரு சனி ராகு கேது இவர்கள் ஒரே ராசியில் இல்லாமல் வெவ்வேறு ராசிகளில் இருக்க வேண்டியது அவசியமாகிறது . அதனால் மணமகன் மணப்பெண் இருவரிடையே குறைந்தபக்க்ஷம் ஓராண்டிலிருந்து இரண்டரை ஆண்டுகள் வித்தியாசம் இருக்க வேண்டும் . ஐந்தாண்டு வித்தியாசம் இருப்பது உத்தமம் .

இவ்வயது வித்தியாசம் ஏற்பட இவ்விருவரில் யார் பெரியவராக இருக்க வேண்டும் ?? ஆண் பெரியவராக இருக்க வேண்டும் .

இதற்கான வாழ்வியல் காரணத்தை பார்ப்போம் – பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் விரைவில் வளர்ச்சி அடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள் இந்த விஷயமானது மணமான காலந்தொட்டு மத்திம வயது வரை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விடாது ஆனால் , கணவணைவிட மனைவி வயது கூடியவராக இருந்தாலோ அல்லது இருவரும் சம வயதினராகவே இருந்தாலும் கூட கணவனை விட மனைவிக்கு முதிர்ச்சி தளர்ச்சி முன்னதாகவே ஏற்படுகிறது .

இல்லறம் என்ற கடலை கடப்பதற்கான படகை செலுத்த பல பேர் சேர்ந்து துடுப்பு போட , கூட்டுக்குடும்ப நடைமுறை இருந்த அந்த காலகட்டங்களிலேயே , கணவனை விட வயது கூடிய மனைவி அல்லது சம வயது கொண்ட தம்பதிகள் மத்திம வயதிற்க்கு பிறகு குறிப்பாக வயோதிக காலத்தில் சிரமப்பட நேரிடும் என்ற காரணத்திற்காக வரனை விட வதுவிற்கு வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டது .

இப்படி இருக்க ,பெரும்பாலும் தனிக்குடித்தனம் , அதிலும் பிள்ளைகள் வெளியூரிலோ வெளிநாடுகளிலோ வசித்து , கணவன் மனைவி மட்டும் தனித்து விடப்படுகின்ற இக்காலத்தில் முன்னோர் கடைபிடித்த விதியை (ஆணைவிட குறைவான வயது பெண்) பின்பற்றுவதே சாலச்சிறந்தது.

முக்கியமாக நம்முடைய சடங்கு சம்ப்ரதாயங்கள் பூஜை நோன்பு விரதம் வாழ்க்கை முறை இவற்றில் கணவன் மூத்தவராகவும் மனைவி இளையவராகவும் இருக்கும்படியான அமைப்பே பிரதானமாய் உள்ளது .

திருமண பொருத்தம் பற்றிய விதிமுறைகள் கேள்வி பதில்களை தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளிலே பார்ப்போம் .

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading