ஆடிக்கிருத்திகை விரதம் பூஜை வழிபாட்டு முறை என்னென்ன ? ஆடி கிருத்திகை போக்கும் தோஷங்கள் தரும் பலன்கள் மகத்துவம் யாவை ? ஆடி கிருத்திகையும் ஜோதிடமும் . ஆடிக்கிருத்திகை என்றைக்கு ? மேலும் பல நல்ல தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்…
ஈசனுடைய சக்தியன்றி ஈரேழுலக சக்தி எதனாலும் அழிவில்லை என்ற வரம்பெற்ற சூரபத்மனை சம்ஹாரம் செய்யும்பொருட்டு சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணிலிருந்து சிவக்குமரன் தீப்பொறிகளாக தோன்ற அஜ்வாலையை அக்னி பகவானும் வாயு பகவானும் சரவணப் பொய்கையில் விட ஆறு தீப்பொறிகளில் இருந்து ஆறு குழந்தைகள் தோன்ற கார்த்திகைப் பெண்கள் அறுவர் குறிப்பிட்ட காலம்வரை அக்குழந்தைகளை வளர்த்தனர்.
அன்னை பராசக்தி அக்குழந்தைகள் அறுவரையும் அணைக்க ஆறுமுகம் கொண்ட ஒரு திருவுருவமானார் முருகப்பெருமான்.ஆறுமுகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு வானத்திலே கார்த்திகை நக்க்ஷத்ரமாக என்றென்றும் ஒளிவீசக்கூடிய பேற்றையும் இவர்கள் நினைவாக முருகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தையும் ( இன்றளவும் நமக்கு பிடித்தமானவர் பெயரை நம் குழந்தைகளுக்கு வைக்கிறோம் )இந்த கார்த்திகை நக்க்ஷத்ரம் அன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர்க்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்கும் என்ற வரங்களையும் பார்வதி பரமேஸ்வரன் அருளினர்.
ஜோதிடரீதியாக பார்த்தோமேயானால் அஸ்வினி பரணி கிருத்திகை என ஜோதிட சாஸ்த்ரத்திலே கிருத்திகை மூன்றாவதாக வந்தாலும் வேத மந்த்ரங்களிலே முதலாவதாக கிருத்திகை நக்ஷத்திரமே இடம் பெற்று இருக்கிறது. மேலும் நவக்ரஹங்களிலே முதல் க்ரஹம் சூரியன். இச்சூரியனுடைய கிருத்திகை உத்திரம் உத்திராடம் என்ற மூன்று நக்க்ஷத்திரங்களிலே முதல் நக்க்ஷத்ரம் கிருத்திகை.
கிருத்திகை அன்று சந்திரன், சூரியனின் கிருத்திகை நக்க்ஷத்திரத்தில் சஞ்சரிக்கின்றார். சந்திரனுடைய சஞ்சார ராசி மேஷம் மற்றும் ரிஷபம். ரிஷபத்திலே சந்திரனுக்கு உச்சபலம் கிடைக்கிறது. சூரியனுக்கு பரமேஸ்வரன் சந்திரனுக்கு பார்வதிதேவி அங்காரகனுக்கு முருகப்பெருமான் வழிபாட்டு தெய்வமாக இருக்கிறார்கள். மேலும் சிவ அம்சமே முருகன், சிவனிலேயே பார்வதியும் அடக்கம் (அர்த்தநாரீஸ்வர தத்துவம்) ஆக, கிருத்திகை வ்ரதம் வழிபாடு சிவ, சக்தி, குகனின் அருளை ஒருசேர தரக்கூடியது. அதாவது சுயஜாதகத்திலே சூரியன் சந்திரன் செவ்வாய் தோஷத்திற்குட்பட்டு இருந்தால் அத்தோஷம் நிவர்த்தியாவது சூரிய சந்திர அங்காரகர் பலம்பெற்று நமக்கு பலன்தருவது . மேலும் சந்திரன் ரிஷப ராசியிலே உச்சம் பெறுவதால் சுக்கிரனுக்குண்டான ப்ரீதியாகவும் இவ்விரதம் அமையும்.
இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கிருத்திகை விரதம் ஒவ்வொரு மாதமும் வருவது நாம் பெற்ற பேறு. அதிலும் ஆடி கிருத்திகை ,கார்த்திகை கிருத்திகை, தை கிருத்திகை இன்னமும் மகிமைமிக்கது. இவற்றில் ஆடி கிருத்திகையில் சூரியனுக்கு 10 1 1 லும், கார்த்திகை கிருத்திகையில் 6 7 லும், தை கிருத்திகையில் 4 5 லும் சந்திரன் இருப்பார். அதாவது சூரியனுக்கு லாப ஸ்தானத்திலும் சம சப்தமத்திலும் பூர்வ புண்ய ஸ்தானத்திலும் சந்திரன் இருக்கக்கூடியது ஆடி கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தை கிருத்திகையின் மகத்துவம்.
பௌர்ணமி அன்று கிருத்திகை நக்க்ஷத்ரம் வரக்கூடிய, அதானால் கார்த்திகை மாதம் என்ற பெயர்பெற்ற சிறப்பு கார்த்திகை கிருத்திகைக்கு இருக்கிறது.
உத்தராயண புண்யகால ஆரம்ப மாதம் தை மாதம்.இம்மாதத்திலே மகர சங்கராந்தி ரதஸப்தமி என வடக்குமுகமாக சஞ்சாரம் தொடங்கும் சூரியபகவான் பூஜிக்கப் படுகிறார் எனவே தை மாத கிருத்திகை சிறப்பு.
சூரியபகவான் தெற்குமுகமாக சஞ்சாரம் தொடங்கக்கூடிய தக்ஷ்ணாயன புண்யகால தொடக்கம் ஆடிமாதம். இதிலே ஆடி கிருத்திகையில் சூரியன் சந்திரனுடைய வீடான கடக ராசியிலே இருந்து, சூரியனுக்கு வீடு கொடுத்த சந்திரன் உச்சம் பெறுவது மிக சிறப்பு.
ஆடி கிருத்திகை வழிபாட்டு முறை – இவ்வளவு மகத்துவம் வாய்ந்த ஆடி கிருத்திகை இவ்வாண்டு ஆடி 17, 02.08.2021 திங்கட்கிழமை (ஸோமவாரம்) வருகின்றது. முன்னாள் இரவு போஜனம் தவிர்த்து இந்நாள் (கிருத்திகை ) அதிகாலை துயிலெழுந்து தலைக்கு நீராடி இல்லத்திலே விளக்கேற்றி நித்யபடி பூஜைகளை செய்து கார்த்திகேயன் வீற்றிருக்கும் திருக்கோவில் சென்று வழிபடவேண்டும். ( ஆலயம் செல்லமுடியாத நிலையில் இல்லத்திலேயே விரதம் பூஜைகளை செய்து கொள்ளலாம்) அன்று முழுக்க உபவாசமிருந்து மறுநாள்காலை ஸ்நானம், பூஜை முடித்து முருகனடியார்க்கு உணவளித்து அதன்பிறகு போஜனம் செய்து விரதம் பூர்த்தி செய்யவேண்டும்.
உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒருபொழுது இருந்தால் போதுமானது.அதுவும் இயலாதவர்கள் மனதார முருகனை பக்தி செய்தால் போதுமானது.
பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி… அலகு குத்திக்கொள்ளுதல் பாதயாத்திரை முடிகாணிக்கை அங்கப்ரதக்க்ஷனம் ஸ்கந்தனுக்கு அபிஷேகம் அலங்காரம் விபூதிக்காப்பு சந்தனக்காப்பு மாலை சாற்றுதல் வேல் சாற்றுதல், தேன் தினைமாவு பஞ்சாமிர்தம் சர்க்கரைப் பொங்கல் விசேஷ பக்க்ஷனங்கள் நைவேத்யம், அர்ச்சனை படிபூஜை (மலையேறி குகனை தரிசிக்க உதவியாய் இருக்கும் திருப்படிக்கட்டுகள் ஒவ்வொன்றையும் பணிந்து வணங்குதல் விளக்கேற்றுதல் சூடம் ஏற்றுதல்) இவையெல்லாம் கார்த்திகேயனின் கடாக்க்ஷத்தை பெற்றுத்தரும் வழிபாட்டு முறைகள்.
ஆடிக்கிருத்திகை பிரார்த்தனை – உலகெங்கிலும் முருகப்பெருமானுக்கு எண்ணற்ற ஆலயங்கள் இருந்தபோதும் அவற்றில் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருத்தணிகை பழனி ஸ்வாமிமலை பழமுதிர்சோலை என்ற அறுபடை வீடுகள் விசேஷமானது. இத்தலங்களை தரிசிக்கும் பேறு இவ்வாழ்க்கையில் நமக்கு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை முதலில் செய்து, பிறகு அவரவருடை பிரார்த்தனைகளை செய்யவேண்டும்.
ஆடிக்கிருத்திகை நமக்கு அருளும் பேறுகள் – திருமணம், மணமானவர்க்கு மங்களகரமான வாழ்வு, நற்புத்திரப்பேறு, தீராத நோய்நொடிகள் அகன்று ஆரோக்கியம், வெற்றி கல்வி ஞானம் வாக்குவன்மை முன்னேற்றம் மற்றும் ஸகல சௌபாக்யங்களும் திருமுருகன் அருளால் உண்டாகும்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை ஷன்முகனுண்டு சஞ்சலமில்லை குமரனுண்டு குற்றமில்லை …
வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா குகனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
குருவாய் அருள்வாய் குகனே
பீமராஜா ஐயர் – விக்னேஷ் ஜோதிட நிலையம்
அடுத்து வருகின்ற ஆடிமாத அற்புத விரத நாட்கள் –
ஆடி 18 ஆம் பெருக்கு https://beemarajaiyer.com/2021/07/23/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
ஆடி அமாவாசை https://beemarajaiyer.com/2021/07/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae/
ஆடிப்பூரம் https://beemarajaiyer.com/2021/07/26/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2/
ஸர்வ தோஷ நிவர்த்தி https://beemarajaiyer.com/2021/07/30/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%b0/

Leave a Reply