எப்படிப்பட்ட வீட்டில் வசிக்கவே கூடாது? எந்த வீட்டை பூட்டி விட வேண்டும்? எந்த வீட்டை இடித்து தள்ள வேண்டும்? எந்த வீட்டை இடித்து கட்ட வேண்டும்? வாழத்தகுதியற்ற வீடு எது?

white and red wooden house with fence

மனிதர்களுக்கு ஆயுள் இருப்பது போல மரம் செடி கொடி பறவையினங்கள் விலங்கினங்கள் இவற்றிற்கெல்லாம் ஆயுட்காலம் இருக்கிறது. அதுபோல நாம் கட்டக்கூடிய வீட்டிற்கும் ஆயுள் இருக்கிறது. நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய வீடுகள், தலைமுறை தலைமுறையாக அடுத்தடுத்து சந்ததியினர் வாழுகின்ற வீடுகள், ஒரே ஒரு தலைமுறை மட்டுமே வசிக்கக் கூடிய வீடுகள், ஒரு தலைமுறைக்கு கூட வராது பாதியிலேயே கைவிட்டுப் போகக்கூடிய இடிக்கப்படக்கூடிய வீடுகள் இருக்கிறது கட்டி முடிக்கப்படாமலேயே கை விடப்படக்கூடிய வீடுகள் இருக்கிறது. இதிலே எந்த மாதிரியான வீடு யாருக்கு அமைகிறது என்பது பல விஷயங்களை பொறுத்து இருக்கிறது.

ஜோதிட சாஸ்திரப்படி மனையோகம் கிரக யோகம் அதற்கு உண்டான கிரகங்கள், வாஸ்து சாஸ்திரப்படி அந்த பூமி எப்படிப்பட்ட தன்மை கொண்டது? பூமியிலே தோஷம் ஏதாவது இருக்கிறதா? மனைதோஷம் பூமி தோஷம் இருக்கிறதா? வீடு எப்படி கட்டப்பட்டது? வாஸ்து குறைபாடுகள் இருக்கிறதா?

இதைத் தாண்டி ஒரு வீட்டை கட்ட தொடங்கும் போது இருக்கக்கூடிய காலம் இருக்கக்கூடிய கிரக நிலை இதற்கு ஏற்றவாறு (அதாவது பூமி பூஜை மனை பூஜை போட்டு வீட்டை கட்ட தொடங்குகிறோமே! அந்த சமயத்திற்கு ஏற்றவாறு) ஆயிரம் ஆண்டு காலம் அந்த கட்டிடம் இருக்குமா? நூறாண்டு காலம் இருக்குமா? அல்லது 50 ஆண்டுகள் இருக்குமா? ஒரு தலைமுறைக்கு கூட வராமல் அது முடிவுக்கு வருமா என்பது இருக்கிறது.

நீங்கள் வீடு கட்டப் போகிறீர்கள் என்று சொன்னால் அதற்கு உண்டான நேரத்தை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியமானது. இதற்கு பல விதிகள் இருக்கிறது, சரியான உத்தமமான முகூர்த்த நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து வீடு கட்ட தொடங்கினால் பல தலைமுறைகள் வாழக்கூடியதாக அந்த வீடு இருக்கும் அப்படி வாழும் போது வளமான ஆரோக்கியமான நிம்மதியான வாழ்க்கை அந்த வீட்டிலே வசிக்க கூடியவர்களுக்கு கிடைக்கும். இதையும் விட முக்கியமாக அந்த மனையை தேர்ந்தெடுக்கும் போதே பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மனை எங்கே இருக்கிறது? மனையை சுற்றி என்ன இருக்கிறது? மனைக்கு உள்ளே அந்த பூமிக்கு உள்ளே தோண்டினால் என்ன வருகிறது? பூமிக்கு மேலே எப்படிப்பட்ட தாவரங்கள் இருக்கிறது? நாம் பார்க்கப் போகும்போது எப்படிப்பட்ட பறவையினங்கள் விலங்கினங்கள் அங்கே இருக்கிறது? என்பதையெல்லாம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த காலகட்டங்களில் வீட்டை கட்ட தொடங்க வேண்டும்? அதற்குண்டான முகூர்த்த லக்னம் தேர்ந்தெடுக்க விதிகள் என்ன? விதி முறைகள் என்னென்ன? வீட்டை எப்படி கட்ட வேண்டும்? வாஸ்து சாஸ்திரப்படி எந்த மாதிரியான அமைப்புகள் சரியானது? யார்….எந்த திசை எந்த நீள அகலம் எத்தனை அடுக்கு வீடுகள் கட்டலாம்? என்னென்ன திசையில் என்னவெல்லாம் வரலாம்? எந்த திசை பார்த்து தலைவாசல் இருக்க வேண்டும்? இப்படியான நிறைய விதிமுறைகள் வழிமுறைகள் இருக்கிறது அதிலே சிலவற்றை ஏற்கனவே இந்த இணையதளத்திலே பதிவிட்டிருக்கிறோம். இன்னும் நிறைய தகவல்கள் இருக்கிறது தொடர்ச்சியாக அடுத்தடுத்து பதிவிடுவோம்.

இப்போது வசிப்பதற்கே தகுதியற்ற வீடு எது என்று தலைப்பில் கேட்ட கேள்விக்கு உண்டான பதிலை பார்ப்போம். வசிப்பதற்கு தகுதியற்ற வீடுகள் என்ற அமைப்பிலே நிறைய விதமான வீடுகள் வரும். இடி விழுந்த வீடு, தீ விபத்து ஏற்பட்ட வீடு, மழைக்காலங்களில் இடிந்து விட்ட வீடு, தற்கொலை செய்து கொள்ளப்பட்ட வீடு, துர்மரணங்கள் ஏற்பட்ட வீடு, குறிப்பிட்ட நட்சத்திரம் திதியிலே ஒரு நபர் இறந்து போன வீடு இப்படியான வீடுகளில் எல்லாம் வசிக்க கூடாது. இவை வசிப்பதற்கு வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளாய் இருக்கிறது. ஆனால் இதிலே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான விதிவிலக்குகள் அதாவது பரிகாரங்கள் பிராயச்சித்தங்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வசிக்க தொடங்கலாம் அதுவரை குறிப்பிட்ட சில சடங்குகளை செய்ய வேண்டும் இப்படியான அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. இதையும் உங்களோடு அடுத்தடுத்து பதிவுகளிலே, ஒவ்வொரு விஷயத்தை ஒவ்வொரு பதிவிலே பார்ப்போம்.

இன்றைக்கு இடி விழுந்த வீட்டிலே வசிக்கலாமா? கூடாதா? வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பதை பார்ப்போம்.

பொதுவாக உயரமான மரங்களிலே இடி விழும். உயரமான கட்டிடங்களின் மீது இடி விழும் மற்றபடி ஆள் அரவமற்ற இடங்களில் இடிவிழும் அதனால் மிக உயரமான கட்டிடங்களிலே இடிதாங்கி வைத்திருப்பார்கள். நம்முடைய பழங்கால கோவில்களிலே கோபுரங்கள் மிகவும் உயரமானதாக இருக்கும், அதிலே இடி விழாத அளவிற்கு சில ஏற்பாடுகளை நம்முடைய முன்னோர்கள் மிகவும் அறிவுபூர்வமாக செய்திருப்பார்கள்.

ஆனால் வசிக்கக்கூடிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிலே இடி விழுகிறது என்று சொன்னால் அது தோஷம். அப்படி இடி விழுந்த வீட்டை அதன் பிறகு நாம் வசிப்பதற்காக வாழ்வதற்காக பயன்படுத்தக் கூடாது. அந்த வீட்டை அப்படியே முற்றிலுமாக இடித்து விட வேண்டும். குறிப்பிட்ட சில பிராயச்சித்தங்களை சாந்திகளை பரிகாரங்களை செய்து குறிப்பிட்ட காலத்திலே மீண்டும் வீட்டை கட்டி அங்கே வாழலாம். ஆனால் அந்த இடி விழுந்த வீட்டை இடித்து விட வேண்டும். இது ஒரு விதமான வழிமுறை இன்னமும் பல வழிமுறைகள் இருக்கிறது.

அந்த பகுதியிலே அதன் பிறகு வீடே கட்டக்கூடாது. அந்த மனை அதன் பிறகு வாழ்வதற்கே தகுதியற்றதாக போய்விடும். இப்படி எல்லாம் கூட சொல்லப்படுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல அறிஞர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். இதுபோல இடி விழுந்த வீட்டை இடித்து விட்டு சில காலம் கழித்து நல்ல நாள் நேரம் தேர்ந்தெடுத்து பரிகாரங்களை செய்து மீண்டும் அங்கே ஒரு புதிய வீடு கட்டி வசிக்கலாம் என்பது சித்தர்கள் ரிஷிகள் மஹான்கள் ஏற்றுக்கொண்ட கருத்து. பெரும்பாலானவர்களுடைய கருத்து.

ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள், மனைகள், புதுவீடு கட்ட வசதி இருக்கக்கூடியவர்களுக்கு இது பொருந்தும். வீட்டை அப்படியே விட்டுவிட்டு அல்லது இடித்துவிட்டு இன்னொரு வீட்டிலே வசிக்கலாம். அல்லது அந்த காலங்களிலே சொந்த பந்தங்கள் உறவினர்கள் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பகுதியிலே இருப்பார்கள். வீட்டை இடித்து கட்டுவது அல்லது புதிதாக வேறு இடத்தில் வீடுகட்டும் வரை தற்காலிகமாக தன்னுடைய சகோதரன் வீட்டிலோ உறவினர் வீட்டிலோ வசிக்கலாம்.

ஆனால் இப்போது அப்படியெல்லாம் சாத்தியம் இல்லை. மேலும் ஒரு வீடு மட்டும்தான் இருக்கிறது, வேறு வீடோ மனையோ இல்லை, இருந்தாலும் வீடுகட்ட வசதி இல்லை. இப்படிப்பட்ட நிலையிலே என்ன செய்வது?

இடி விழுந்த வீட்டினுடைய அமைப்பை பொறுத்து (அது நீள அகலமாக பெரிய மனை பரப்பிலே கட்டப்பட்ட பெரிய வீடாக இருந்தால்) எந்த திக்கிலே இடி விழுந்ததோ அந்த பக்கத்திலே அந்த முழு வீட்டிற்கும் சேதாரம் ஆகாத அளவிற்கு ஜாக்கிரதியாக பார்த்து இடித்துவிட்டு கொஞ்ச காலம் அங்கே வசித்து அதன் பிறகு முறையான பரிகாரங்களை செய்து கொண்டு முற்றிலுமாக புது வீட்டை கட்டுவது அல்லது கையோடு இடித்த பகுதியை மட்டும் மீண்டும் கட்டி விடுவதோ இதை செய்யலாம்.

கீழே மேலே வீடு கட்டப்பட்டிருக்கிறது, மேல் தளத்திலே இடி விழுந்தது என்றால் அந்த தளத்தை மட்டும் இடித்துவிட்டு கீழே வசித்துக் கொண்டு பிறகு கொஞ்ச காலம் கழித்து மேலே கட்டிக் கொள்ளலாம் சிறிய வீடாகத்தான் இருக்கிறது. சிறிய மனை பரப்பு தான் என்று சொல்லும் போது அந்த இடி விழுந்த இடத்திலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடித்துவிட்டு மேலே தளத்தையும் கூட எடுத்துவிட்டு மற்ற பகுதியிலே இருந்து கொண்டு கொஞ்சம் காலத்திற்குப் பிறகு இதை சரி செய்யலாம். இப்படியாக வேறு வழி இல்லாத போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு செய்யலாம்.

சாஸ்திரங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, அது பற்றிய நம்பிக்கையும் இருக்கிறது, புரிதலும் இருக்கிறது என்பவர்கள் எவ்வளவு பெரிய மனைபரப்பு அதிலே எவ்வளவு பெரிய வீடு அந்த வீட்டிலே எந்த பாகத்திலே இடி விழுந்தது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு ஏற்றவாறு சில எளிய வழிமுறைகளை வழிபாடுகளை கையாண்டு சிலகாலம் குடியிருக்கலாம் வசிக்கலாம்.

இப்படியாக வசிப்பதற்கு தகுதியற்ற வீடு, வாழ்வதற்கு, வீடு கட்டுவதற்கு தகுதியற்ற மனைகள் இருக்கிறது அதிலிருந்து இன்றைக்கு ஒரு பகுதியை தெரிந்து கொண்டோம் இன்னும் நிறைய தகவல்கள் இருக்கிறது அடுத்த அடுத்த பதிவில் பார்ப்போம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading