தினப் பொருத்தம்/திருமண பொருத்தம்…பாகம் 1

scenic view of night sky with stars

திருமண பொருத்தத்தில் தினப் பொருத்தம் முக்கியமானது. இதை சரியாக புரிந்து கொள்ள கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம். தினப் பொருத்தம் இருந்தால் தினசரி வாழ்க்கையிலே தம்பதிகள் அன்னியோன்யமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது, ராசியாக இருப்பது உதவி செய்து கொள்வது இப்படியாக ஆதர்சன தம்பதிகளாக இருப்பார்கள். தினப்பொருத்தம் இல்லாத போது, தினம் தினம் சண்டை சச்சரவு, வாக்குவாதம், கஷ்ட நஷ்டங்கள் என ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு யுகமாக போகும். இப்படியான தினப்பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

பொருத்தம் பார்ப்பது என்று சொன்னாலே பெண்ணுடைய நட்சத்திரத்திலிருந்து, ராசியிலிருந்து தான் பார்க்கவேண்டும். அப்படியாக பெண்ணுடைய நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி 2 4 6 8 9 என எண்ணிக்கை வரும்போது தினப்பொருத்தம் உண்டு 1 3 5 7 10 என வரும்போது பொருத்தம் இல்லை. சரி பெண் நட்சத்திரத்தில் இருந்து 10-வது நட்சத்திரம் வரை ஆண் நட்சத்திரம் வந்தால் இதை பார்த்து விடலாம். மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இருக்கிறதே? பெண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணும் போது ஆணுடைய நட்சத்திரம் பத்திற்கு மேற்பட்டு வந்தால் என்ன செய்வது?

பெண் நட்சத்திரத்தில் இருந்து, முதல் ஒன்பது நட்சத்திரங்களை முதல் பரியாயம் என்றும், அடுத்த ஒன்பது நட்சத்திரங்களை அதாவது 9 லிருந்து 18வது நட்சத்திரம் வரை இரண்டாவது பரியாயம் என்றும், அடுத்த ஒன்பது நட்சத்திரங்களை அதாவது 18 லிருந்து 27 வரை உள்ள நட்சத்திரங்களை 3வது பரியாயம் என்றும் சொல்வர்.

முதல் பரியாயத்திலே பெண்ணுடைய நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் என்றும், இரண்டாவது பரியாயத்திலே பெண்ணுடைய நட்சத்திரம் அனு ஜென்ம நட்சத்திரம் என்றும், மூன்றாவது பரியாத்திலே பெண்ணுடைய நட்சத்திரம் த்ரிஜென்ம நட்சத்திரம் என்றும் சொல்லப்படும். கோவிலில் அர்ச்சனை செய்யும்போது நட்சத்திரம் ராசி தெரியாதவர்களுக்கு ஜென்ம நட்சத்திரம் ஜென்ம ராசி என்று சொல்லி அர்ச்சனை செய்வார்கள். பூஜையிலே சங்கல்பம் செய்வார்கள்.

இந்த நட்சத்திர அட்டவணையை பாருங்கள். 27 நட்சத்திரங்களை ஒன்பது கிரகங்களுடையதாக பிரித்துவிடலாம்.

அஸ்வினி மகம் மூலம் – கேது

பரணி பூரம் பூராடம் – சுக்ரன்

கிருத்திகை உத்திரம் உத்திராடம் – சூரியன்

ரோகிணி ஹஸ்தம் திருவோணம் – சந்திரன்

மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் – செவ்வாய்

திருவாதிரை ஸ்வாதி சதயம் – ராகு

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி – குரு

பூசம் அனுஷம் உத்திரட்டாதி – சனி

ஆயில்யம் கேட்டை ரேவதி – புதன்

உதாரணத்திற்கு பெண் கேதுவுடைய நட்சத்திரத்திலே வந்தால், அஸ்வினி நட்சத்திரமாக இருந்தால் அஸ்வினி ஜென்ம நட்சத்திரம் மகம் என்பது அனு ஜென்மம் மூலம் என்பது த்ரிஜென்மம். இந்த கேதுவுடைய நட்சத்திரங்களில் பெண் மூல நட்சத்திரமாக இருந்தால் அது ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி அனுஜென்ம நட்சத்திரம் மகம் த்ரிஜென்ம நட்சத்திரம்.

அதுபோல புதனின் நட்சத்திரத்தில் வந்தால் ஆயில்ய நட்சத்திரமாக இருந்தால், ஆயில்யம் ஜென்ம நட்சத்திரம் கேட்டை அனு ஜென்மம் ரேவதி என்பது த்ரிஜென்மம். ரேவதி ஜென்ம நட்சத்திரம் என்றால் ஆயில்யம் அனுஜென்மம் கேட்டை த்ரிஜென்ம நட்சத்திரம்.

இப்படியாக ஒரு நட்சத்திரம் எந்த கிரகத்தினுடையது என்பதை நாம் இந்த அட்டவணையில் இருந்து எடுத்து அந்த கிரகத்தினுடைய மூன்று நட்சத்திரங்களில் பெண்ணுடைய நட்சத்திரம் எதுவோ அதை ஜென்ம நட்சத்திரம் என்று கணக்கிட்டு அதிலுருந்து ஆணுடைய நட்சத்திரம் 9 கக்குள் வராவிட்டால் , அனுஜென்ம நட்சத்திரத்திலிருந்து 9 கக்குள் வருகிற தா என பார்க்கவேண்டும். அதிலும் வராவிட்டால் த்ரிஜென்ம நட்சத்திரத்தை 1 என எண்ணி 2 4 6 8 9 ஆவதாக ஆண் நட்சத்திரம் வந்தால் பொருத்தம் உண்டு. 3 5 7 ஆகிய வந்தால் பொறுத்தமில்லை.

இன்னொரு வழி, சுலபமான வழி – பெண்ணுடைய ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 9 கக்கு மேற்பட்டு ஆண் நட்சத்திரம் வந்தால் 9 ஆல் வகுத்த மீதி 2 4 6 8 என வர பொருந்தும். 3 5 7 என வந்தால் பொருந்தாது.

தினப்பொருத்தம் பார்ப்பதில் விதிவிலக்குகள் இருக்கிறது. அவற்றையும் , வதம் வைநாசிகம் என்று சொல்லக் கூடிய தோஷங்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவகிரஹ ஹோமம் க்ரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading