திருமண பொருத்தம் என்று சொன்னாலே பெண்ணுடைய ராசியிலிருந்து, நக்ஷத்திரத்திலிருந்து பார்க்க வேண்டும்.
பெண்ணுடைய ராசியிலிருந்து ஆறாவது ராசியாக ஆணுடைய ராசி வந்தால், ஆணுடைய ராசியிலிருந்து பெண் ராசி எட்டாவதாக வரும். இது சஷ்டாஷ்டக தோஷம் எனப்படுகிறது.
இப்படி சஷ்டாஷ்டக தோஷம் ஏற்பட்டால் அந்நியோன்யம் குறைவாக இருக்கும். பிரச்சனை என்று வந்து விட்டால் யாரும் விட்டுக்கொடுத்து போக முன்வரமாட்டார்கள். சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது அது பெரியதாக மாறும். கருத்து வேற்றுமையையோ பிரிவினையையோ ஏற்படுத்தும். உடல் நிலை பாதிப்பு, கடன் பிரச்சனை வழக்கு பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அவ்வப்போது பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தற்காலிக பிரிவோ நிரந்தர பிரிவோ ஏற்படலாம்.
அதனால் திருமண பொருத்தம் பார்க்கும்போது சஷ்டாஷ்டக தோஷம் இருந்தால் அந்த ஜாதகங்களை சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.
பொதுவாக எந்த ஒரு விதி இருந்தாலும், அதற்கு விதிவிலக்கு என்பது இருக்கும். அப்படியாக ஜோதிட சாஸ்திரத்திலும் கூட நிறைய தோஷங்களுக்கு விதிவிலக்குகள் சொல்லப்பட்டுள்ளது. சஷ்டாஷ்டக விஷயத்திலே, பெண்ணுடைய ராசி மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் ராசியாக இருந்து சஷ்டாஷ்டக தோஷம் ஏற்பட்டால் இது அனுகூல சஷ்டாஷ்டகம் எனப்படுகிறது. இது விதிவிலக்கு. இப்படி இருந்தால், இன்ன பிற அம்சங்கள் சரியாக கூடி வரும்போது, அதாவது ஏனைய பொருத்தங்கள் தசா புத்தி குடும்ப களத்திர ஸ்தானங்கள் கோச்சாரம் கிரகநிலை இவை சரியாக அமைந்தால் திருமணம் செய்யலாம்.
சஷ்டாஷ்டக தோஷம் சம்பந்தமான சில தகவல்களை இப்பதிவில் பார்த்தோம். ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் பண்டிகை விரத நாட்கள் இவை சம்பந்தமான தகவல்களை தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி ஹோமம் நவகிரஹ ஹோமம் கிரஹப்பிரவேசம் திருமணம் செய்ய அணுகவும்.
விக்னேஷ் ஜோதிட நிலையம்
பீமராஜா ஐயர்

Leave a Reply