வேதைப் பொருத்தமும்-விவாஹ பொருத்தமும்

bouquet of fresh flowers placed on table

திருமண பொருத்தம் பார்க்கும்போது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய பொருத்தமாக வேதைப் பொருத்தம் இருக்கிறது. ஒன்றுக்கொன்று வேதையான நட்சத்திரத்திலே திருமணம் செய்தால், தம்பதிகளிடையே வேதனையை ஏற்படுத்துவது பகையை உண்டாக்குவது மகிழ்ச்சியின்மையை உருவாக்குவது பிரித்து விடுவது இப்படியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆகையால் வேதைப் பொருத்தம் என்பது மிக அவசியமாக பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சாதாரணமாக பேச்சுவழக்கிலே உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். ஆனால் இந்த வேதைப் பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவருக்கு ஒருவர் வேதையான நட்சத்திரமாக தம்பதிகள் அமைந்துவிட்டால் மூன்று பக்கமும் இடி என்பதாக ஆகிவிடும்.

12 ல் 3 – அதாவது, துவாதச பொருத்தங்கள் என்று சொல்லப்படக்கூடிய 12 ல் 3 பொருத்தங்கள் வேதைப் பொருத்தம் என்ற ஒரு பொருத்தத்திலேயே உள்ளடங்கி இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே பார்க்கும்போது அதாவது பொருத்தம் பார்க்கும் போது வேதையான நட்சத்திரம் என்பதை தெரிந்து அதை நாம் தவிர்க்கும் போது அதிலேயே மூன்று விதமான தோஷங்கள் தவிர்க்கப்படுகிறது. மிக எளிதாக சட்டென்று ஒரு நட்சத்திரம் பொருந்தாது என்பதை இந்த வேதையை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

1 ல் 3 – வேதைக்கு உள்ளே நாடிப் பொருத்தம் ரஜ்ஜூப் பொருத்தம் சஷ்டாஷ்டக தோஷம் இப்படியான மூன்று விஷயங்கள் அடங்கி இருக்கிறது. நாடிப்பொருத்தம் இல்லாத, ரஜ்ஜு பொருத்தம் இல்லாத, ஒன்றுக்கு ஒன்று சஷ்டாஷ்டகமாக இருக்கின்ற ஒரு நட்சத்திரம் வேதை நட்சத்திரம் ஆக இருக்கும். அதனால் நாம் வேதை நட்சத்திரம் தெரிந்து அதை தவிர்க்கும் போது, இந்த மூன்று தோஷங்களை தவிர்த்ததாக அர்த்தம். இப்போது எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதை பார்ப்போம். அதாவது பொருந்தாத நட்சத்திரம் தவிர்க்க வேண்டிய நட்சத்திரம்..

அஸ்வினி – கேட்டை

பரணி – அனுஷம்

கிருத்திகை – விசாகம்

ரோகிணி – ஸ்வாதி

மிருகசீரிஷம் – சித்திரை – அவிட்டம் (ஒன்றுக்கொன்று வேதை )

திருவாதிரை – திருவோணம்

புனர்பூசம் – உத்திராடம்

பூசம் – பூராடம்

ஆயில்யம் – மூலம்

மகம் – ரேவதி

பூரம் – உத்திரட்டாதி

உத்திரம் – பூரட்டாதி

ஹஸ்தம் – சதயம்

மேற்கண்ட நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதை ஆகும் . இப்படி இருந்தால் பொருத்தமில்லை. இப்பதவில் திருமணப் பொருத்தத்தில் முக்கியமான வேதைப் பொருத்தம் பற்றி சில தகவல்களை பார்த்தோம். இந்த வேதைப் பொருத்தத்திலே சொல்லப்பட்டுள்ள நாடிப்பொருத்தம் சஷ்டாஷ்டக தோஷம் ரஜ்ஜு பொருத்தம் இவற்றை தனித்தனியாக இன்னொரு பதிவில் அறிந்து கொள்வோம்.

திருமணம் என்று சொல்லக்கூடியது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். அதனால் தசவித/துவாதச பொருத்தம் பார்த்து, இதை ஆரம்ப கட்டமாக எடுத்துக்கொண்டு இதன் பிறகு ஆண் பெண் சுய ஜாதகங்களை வைத்து, ஜாதக பொருத்தம் பார்த்து நல்ல காலநேரம் தேர்ந்தெடுத்து முறைப்படி சடங்குகளை எல்லாம் செய்து தங்களுடைய மகன்/மகளுக்கு விவாஹம் செய்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ பிரார்த்திக்கிறோம்.

திருமண பொருத்தம் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் பண்டிகைகள் விரதங்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள் இப்படியான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து இந்த இணையதளத்தில் பார்ப்போம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவகிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading